அறுவடைப் பின்சார் நோய்கள் :: பழங்கள் :: ஆப்பிள்
அல்ட்டர்னேரியா அழுகல்: அல்ட்டர்னேரியா அல்ட்டர்னேட்

அறிகுறிகள்:

  • இந்நோயின் அழுகல் அறிகுறிகள் வட்டவடிவத்தில் இருக்கும், பழுப்பிலிருந்து கருப்பு நிற நைவுப்புண் தோன்றும், நடுவில் உள்ள தோலை சுற்றி ஒடிந்து, திசுக்கள் வலுக்குறைந்து காணப்படும்
  • புள்ளிகள் மேலோட்டமாக காய்ந்து, உறுதியாகத் தோன்றும்
  • பழத்தின் மேற்புறத்தில் உள்ள புள்ளிகள் ஆழந்த பழுப்பு நிறத்தில் இருந்து கருப்பு நிறமாகக் மாறிவிடும். ஆரம்ப நிலையில் அழுகிய திசுக்கள் பஞ்சு போன்று இருக்கும், தாக்கப்பட்ட சதைப்பகுதிகள் கருப்பு நிறமாக மாறும்
வட்டவடிவ பழுப்பு அழுகல் ஆழந்த பழுப்பு நிற புள்ளிகள் திசுக்கள் அழுகல் உள் திசுக்கள் அழுகல்

கட்டுப்பாடு:

  • பழத்தோட்டதை சுகாதாரமாக பராமரிப்பதோடு பழங்களை மென்மையாக கையாளுதல் வேண்டும்.
  • பழம் சரியான முதிர்ச்சி நிலையை அடையும் போது அறுவடை செய்யவும்.
  • பழங்களை கவனமாக பறித்து, கழுவி   பெட்டியில் அடைக்கவும்.
  • பழங்களை  0 °- 4 °C   வெப்பநிலையில் சேமிக்கவும்.
Image source: http://postharvest.tfrec.wsu.edu/marketdiseases/alternaria.html

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015